recipes

வரகு /குதிரைவாலி பிரியாணி

தேவையான பொருட்கள் :

வரகு /குதிரைவாலி - 1/2 கிலோ பெரிய வெங்காயம் - 2 பெரியது தக்காளி - 5 பச்சை மிளகாய் -3 இஞ்சி ,பூண்டு விழுது - 1 மேஜை கரண்டி புதினா - 1/4 கட்டு கொத்தமல்லி -1/4 கட்டு மிளகாய்ப்பொடி - 2 மேஜை கரண்டி மல்லி பொடி - 2 மேஜை கரண்டி மங்கல் பொடி - 1 சிட்டிகை கரம்மசாலா பொடி -1/2 மேஜை கரண்டி தயிர் 1/2 மேஜை கரண்டி நெய் - 100 கிராம்

செய்முறை :

பெரிய வெங்காயம் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளி,புதினா,கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் . பாத்திரத்தில் நெய் ஊற்றி வெங்காயம்,இஞ்சி,பூண்டு விழுது ,தக்காளி,பச்சை மிளகாய்,புதினா கொத்தமல்லி போட்டு, தாளிக்கவும் . பின் மிளகாய் பொடி ,மல்லிபொடி,மஞ்சள் பொடி,கரம்மசாலா பொடி ,தயிர் சேர்த்து நன்கு வதக்கவும்.இதில் நன்கு கழுவிக் களைந்த அரித்த அரிசியுடன் 2 மடங்கு தண்ணிர் சேர்த்து பாதி வெந்த நிலையில் 10-15 நிமிடங்கள் சிம்மில் வைத்து இறக்கவும்.குக்கர் இன்றி செய்பவர்கள் பாதி வெந்த நிலையில் மூடிவிட்டு மூடிமேல் கங்குகள் போட்டு தம் போடவும் .

வரகு / குதிரைவாலி தக்காளி சாதம்

தேவையான பொருட்கள் :

வரகு / குதிரைவாலி -1/2 கிலோ தக்காளி - 1/4 குவளை /6.25 கி வெங்காயம் -200 கிராம் பச்சை மிளகாய் -20 கிராம் கடுகு -தே. அளவு எண்ணெய் -தே. அளவு கறிவேப்பிலை / கொத்தமல்லி -தே. அளவு

செய்முறை :

தக்காளி ,வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பில்லை,கொத்தமல்லியை நறுக்கி வைத்துக்கொள்ளவேண்டும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு ,கறிவேப்பில்லை,பச்சை மிளகாய்,வெங்காயம்,தக்காளி மற்றும் கொதமைல்லியை போட்டு வதக்கவேண்டும்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவேண்டும்.பின்பு குதிரைவாலி/வரகு அரிசியை சேர்த்து 20 முதல் 30 நிமிடம் வரை வேக வைத்து இறக்க வேண்டும் .

வரகு/குதிரைவாலி கிச்சடி

தேவையான பொருட்கள் :

வரகு/குதிரைவாலி அரிசி -1 குவளை/250 கி கடுகு - 2 கிராம் உளுந்து -10 கிராம் கடலைப் பருப்பு -10 கிராம் இஞ்சி -10 கிராம் கறிவேப்பிலை -2 கொத்து கொத்தவரங்காய்,மஞ்சள்,பூசணி,சுரக்காய்,பீர்க்காய்,தேங்காய், சின்ன வெங்காயம் - 1 குவளை/250 கி உப்பு - தே. அளவு கொத்தமல்லி -1 கைபிடி கடலை எண்ணெய் -2

செய்முறை :

வரகு/குதிரை வாலி அரிசியை சுத்தம் செய்துக் கொள்ளவும் . எண்ணெய்யை சூடாகி,கடுகு,உளுந்து,கடலைப் பருப்பு,இஞ்சி,கறிவேப்பிலை,வெங்காயம்,காய்கறிகள்,உப்பு ஆகியவற்றை நன்றாக வதக்கவும். பின்பு மூன்று குவளை தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின் வரகு/குதிரை வாலி அரிசியை சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும். கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும்.

வரகு/குதிரைவாலி கேசரி

தேவையான பொருட்கள் :

வரகு/குதிரைவாலி ரவா -250 கிராம் வெல்லம்-300 கிராம் நெய்-50 கிராம் முந்திரி -20 கிராம் திராட்சை -20 கிராம் ஏலக்காய்த் தூள் - 1/2 தேக்கரண்டி சுக்குத் தூள் - 2 சிட்டிகை பன்னீர் - 2 தேக்கரண்டி

செய்முறை :

வரகு/குதிரை வாலி ரவாவை சிறிது நெய் விட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். வெல்லத்துடன் சிறிது நீர் சேர்த்து பாகாக்கி வடிக்கவும். 400 மி.லி,நீரை கொதிக்க வைத்து வறுத்த வரகு/குதிரை வாலி ரவாவை சேர்த்து கிளறவும். இடையிடையே சிறிது நெய் சேர்க்கவும். வெல்லப்பாகு சேர்த்து கிளறவும்,சுருண்டு வரும்போது வருத்த முந்திரி,திராட்சை,ஏலக்காய்த் தூள்,சுக்குத் தூள்,பன்னீர் சேர்த்து இறக்கவும்..

வரகு முறுக்கு

தேவையான பொருட்கள் :

வரகு அரிசி மாவு-1 குவளை/250 கி கடலை மாவு -1 குவளை/250 கி எள் -2 மேsசைக் கரண்டி வெண்ணெய் - 1 மேசைக் கரண்டி ஓமம் - 1 மேசைக் கரண்டி மிளகாய்த் தூள் - 1 மேசைக் கரண்டி பெருங்காயம் - 1 சிட்டிகை உப்பு - தேவையான அளவு

செய்முறை :

வரகு அரிசி மாவு,கடலை மாவு,உப்பு சேர்த்து நன்கு சலித்துக் கொள்ளவும். சலித்து மாவுடன் வறுத்த எள்,ஓமம்,வெண்ணெய்,மிளகாய்த் தூள்,பெருங்காயம்,இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து சிறிது நீர் சேர்த்து முறுக்கு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். எண்ணெய் காய்ந்தவுடன் முறுக்கு அச்சில் பிழிந்து எண்ணெயில் பொறித்து எடுக்கவும்..

வரகு மிளகு சாதம்

தேவையான பொருட்கள் :

வேகவைத்த வரகு சாதம் - 500 கிராம் பொட்டுக்கடலை - ஒரு கைப்பிடி கடலைப்பருப்பு - ஒரு கைப்பிடி வரமிளகாய் -2 எண்ணிக்கை உளுந்து - ஒரு கைப்பிடி உப்பு தேவையான அளவு தனியா - இரண்டு கைப்பிடி வெந்தயம்- 1/2 தேக்கரண்டி எண்ணெய் -4 மேசைக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி பெருங்காயம்- 1சிட்டிகை மிளகு - 2 மேசைக்கரண்டி

செய்முறை :

உளுந்து கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை, வெந்தயம், சீரகம், மிளகு, வரமிளகாய் இவை அனைத்தையும் தனித்தனியாக பொன்னிறமாக வறுக்கவும். பின் வருத்த எல்லா மசாலா பொருட்களையும் பொடியாக அரைத்து வைக்கவும். எண்ணெய் காய்ந்தவுடன் உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயம், தாளித்து சாதத்திற்கு ஏற்றவாறு 4 மேசைக் கரண்டி மசாலா போடி சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும். வேக வைத்த வரகு சாதத்தை சேர்த்து கிளற வேண்டும்.

வரகு வெண் பொங்கல்

தேவையான பொருட்கள் :

வரகு -100 கிராம் பச்சரிசி -100 கிராம் பாசிப்பருப்பு -50 கிராம் நெய் -50 கிராம் மிளகுத் தூள் -1 கிராம் சீரகம் -1 கிராம் முந்திரி -10 கிராம்கறிவேப்பில்லை -சிறிதளவு இஞ்சி - 1 துண்டு பச்சை மிளகாய் -3

செய்முறை :

வரகு, ப. அரிசி, பா. பருப்பு இவை மூன்றையும் சேர்த்து கழுவி பாத்திரத்தில் மூன்று மடங்கு தண்ணிர் ஊற்றி வேக வைக்க வேண்டும். சீரகம், மிளகு, இஞ்சி, கறிவேப்பில்லை, கொத்தமல்லி, ப. மிளகாய், முந்திரி இவற்றை நெய் ஊற்றி தாளித்து சாதத்தில் கொட்டி கலக்கவேண்டும். பின் சுவையான வரகு வெண்பொங்கல் ரெடி.

குதிரைவாலி இடியாப்பம்

தேவையான பொருட்கள் :

குதிரைவாலி அரிசி - 1 குவளை/250 கி தேங்காய் -1 குவளை/250 கி ஏலக்காய் - 2 எண்ணிக்கை உப்பு-சிறிது வெல்லம் -1/4 குவளை/62.5 கி

செய்முறை :

குதிரைவாலி அரிசியை 2 மணி நேரம் ஊற விடவும்.உப்பு சேர்த்து மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.கெட்டியாக இருப்பது நல்லது. உடனே இந்த மாவை இட்லி தட்டில் இட்லி போல நன்கு வேகவிடவும். பின் இதனை இடியாப்ப அச்சில் வைத்து பிழிந்து எடுக்கவும். தேங்காயுடன் ஏலக்காய் சேர்த்து அரைத்து,வெல்லத்துடன் கொதிக்க விட்டு,இடியாப்பத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். காரம் வேண்டுமென்றால் இடியாப்பத்தை உதிர்த்து விட்டு எண்ணெய்,கடுகு,மிளகு,சீரகம்,வரமிளகாய் போட்டு தாளித்து சாப்பிடலாம்.

ராகி மால்ட்

தேவையான பொருட்கள் :

ராகி -800 கிராம் வெல்லம் /சர்க்கரை -2 லிட்டர் ஏலக்காய் -தேவையான அளவு
செய்முறை :
ராகியை நன்றாக சுத்தம் செய்து ,தண்ணிரில் 8 முதல் 10 மணி வரை ஊற வைக்கவும் .நீரை வடிக்கட்டிய பின்பு ஊறியுள்ள ராகியை சுத்தமான ஈரத்துணியில் கட்டி 48 மணி நேரம் வைத்து முளை வரவிடலாம் .துணியின் ஈரம் கயமலிருக்க சிறிது நீரை அவ்வப்போது தெளிக்க வேண்டும் முளைக் கட்டிய ராகியை வெயிலில் நன்றாக உலர்த்திய பின் வாணலியில் போட்டு நன்கு மணம் வரும் வரை வறுத்து ,முளையை நீக்கி சுத்தம் செய்யவும் . பின்பு மாவாக அரைத்து கொள்ளவும்.முளைகட்டிய ராகி பானம் தயார் செய்யும் முறை : தண்ணிரில் முளை கட்டிய ராகி மாவை சேர்த்து கட்டியில்லாமல் சேர்த்து கலக்கி கொதிக்க வைக்கவும்.இத்துடன் வெல்லம் / சர்க்கரை ஏலக்காய் தூளை சேர்த்து கலக்கி அருந்தவும் .

ராகி பக்கோடா

தேவையான பொருட்கள் :

ராகி மாவு -1 கிலோ வெங்காயம் -2 கறிவேப்பிலை -தே .அளவு ப.மிளகாய் -100கி உப்பு -தே.அளவு எண்ணை (பொறிக்க )-1லி கொ .மல்லி -தே.அளவு இஞ்சி,பூண்டு பேஸ்ட் -250கி தண்ணிர்-1 லி
செய்முறை :
மாவு ,அரிந்த வெங்காயம் ,கறிவேப்பிலை ,ப.மிளகாய் ,உப்பு ,கொத்தமல்லி ,இஞ்சி ,பூண்டு பேஸ்ட் ஆகிய அனைத்து தேவையான பொருட்களையும் சேர்த்து கலக்கி எண்ணெயில் பொறித்து எடுக்க வேண்டும்.

திணை / சாமை / பனிவரகு பாயாசம்

தேவையான பொருட்கள் :

திணை / சாமை / பனிவரகு அரிசி -350 கிராம் வெல்லம் -300 கிராம் வெல்லம் -20கிராம் ஏலக்காய்த் தூள் -50கிராம் முந்திரி -50கிராம் உலர்ந்த திராட்சை -50 கிராம் நெய் -80 சேர்க்கவும் மி .லி . பால் -80 மி .லி . தண்ணிர் -3 லிட்டர்

செய்முறை :

பால் மற்றும் தண்ணிர் கலந்து கொதிக்க வைக்கவும் . கொதிக்கும் போது திணை / சாமை / பனிவரகு அரிசியைக் கொட்டி வேக வைக்கவும் . பொடித்த வெல்லம் மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்க்கவும் . நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்துக் கிளறி சூடாக பரிமாறவும் .

தினை இனிப்பு பொங்கல்

தேவையான பொருட்கள் :

தினை அரிசி-1 குவளை/250 கி வெல்லம் - 1/2 குவளை/125 கி முந்திரி -15 கி திராட்சை -15 கி பாசிப்பருப்பு -1/2 குவளை/125 கி நெய் - 2 தே. கரண்டி ஏலக்காய் பொடி- 1 தே.கரண்டி சுக்குத் துள் - 1 சிட்டிகை தண்ணீர்- தே.அளவு

செய்முறை :

தினை அரிசி,பாசிப்பருப்பு இரண்டையும் சுத்தம் செய்து,தண்ணீரில் வேகவிடவும். அரை பதம் வெந்தவுடன்,சிறிதளவு தண்ணீரில் கரைத்து,கொதிக்க வைத்து வடிகட்டிய வெல்லத்தை அதனுடன் சேர்த்து கலக்கவும். நன்கு குழைய வெந்து வரும்போது நெய் விட்டு கிளறவும். கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை,ஏலக்காய்த் தூள்,சுக்குத் தூள் சேர்த்து பரிமாறவும்.

ராகி இட்லி

தேவையான பொருட்கள் :

ராகி மாவு -1குவளை /250 கி உளுந்து -1/4 குவளை /62.5 கி வெந்தயம் -2 தேகரண்டி உப்பு -தே .அளவு

செய்முறை :

ராகி ,உளுந்து,வெந்தயம் முதலியவற்றை 6 மணி நேரம் உறவிட்டு இட்லி மாவு பதற்திற்கு அரைத்தெடுக்கவும் மாவு கலவையை உப்பு சேர்த்து 6 முதல் 8 மணி நேரம் புளிக்க விட்டு இட்லியாக ஆவியில் வேகவிடவும் சுவையான இட்லி தயார் .

ராகி வடை

தேவையான பொருட்கள் :

ராகி மாவு -1குவளை /250 கி உளுந்து -2 குவளை /500 கி மிளகாய் -4 இஞ்சி ,பூண்டு - சிறு துண்டு சீரகம் -1தேக்கரண்டி மிளகு -1/2தேக்கரண்டி பெருங்காயம் -1 சிட்டிகை உப்பு -தே .அளவு கறிவேப்பிலை -2 நறுக்கியது சின்னவெங்காயம் -1/2 குவளை /125 கி கொத்தமல்லி -1கைப்பிடி எண்ணெய் (பொறிக்க )-தே .அளவு

செய்முறை :

உளுந்தை ஊற வைத்து மிளகாய், இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு, பெருகாயம், உப்பு இவை அனைத்தையும் ஒன்றாக வடை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். அதனுடன் ராகிமாவு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், கொத்தமல்லி இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து, அடையாக தட்டி எண்ணெயில் பொறித்தெடுக்கவும் .